புலிகளுக்குத் சர்வதேச ரீதியில் தடை விதிப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தார் லக்ஸ்மன் கதிர்காமர் – எரிக் சொல்ஹெய்ம்

0
143
erricதமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச ரீதியில் தடை செய்வதற்கு இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மேற்கொண்ட நடவடிக்கை தவறானது என இலங்கைக்கான  நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும் அந்த நாட்டின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,
ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டமை சமாதானத்தை ஏற்படுத்த தடையாக இருந்தது. இந்த நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் சர்வதேச ரீதியில் தடை விதிப்பதில் முக்கிய பங்காற்றியிருந்த இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் இந்த நடவடிக்கை தவறானது என்றே நான் கருதுகின்றேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அரசியல் தலைவர்களும் இராஜதந்திரிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை காண வழியேற்பட்டிருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here