பிரான்சில் கடந்த 19.01.2025 அன்று திடீர் உடல்நலக்குறைவால் சாவடைந்த செயற்பாட்டாளர் அன்ரன் ஜெயசோதி(கமல்) அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தினர் நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிப்பு செய்துள்ளனர்.
அதன் முழு வடிவம் வருமாறு:-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலை உளமார ஏற்று,1985 தொடக்கம் போராளியாகவும்,பின்னர் 1990 ம் ஆண்டிலிருந்து இறுதிவரை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளராகவும்,முல்கவுஸ் அன்புத்தமிழ்கழக தலைவராகவும் செயற்பட்டுத் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த செபஸ்தியாம்பிள்ளை அன்ரன் ஜெயசோதி(கமல்) அவர்களை நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகிறோம்.
அனைத்துலகத் தொடர்புகள் தமிழீழ விடுதலை புலிகள்.
