
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் நடாத்தப்படும் தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வு(2024/2025) இன்று (25.01.2025) சனிக்கிழமை சிறப்பாக ஆரம்பமானது.

மாணவர்கள் ஆர்வத்தோடு தேர்வில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது.
பிரான்சு ரீதியில் பாலர் நிலை மற்றும் வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 12 வரை குறித்த தேர்வு இன்றும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் அதிகமான தமிழ்ச் சோலைப் பள்ளிகளில் இடம்பெறுகிறது என பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.

இத்தேர்விற்கான புலன் மொழி வளத்தேர்வு வரும் வாரம் இடம்பெறவுள்ளது.
தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு முன்னோடியாக வருடாந்தம் அரையாண்டுத் தேர்வு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





















(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – ஊடகப்பிரிவு)