
ஆவரங்கால் பகுதியில் நேற்று இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த உதயநாதன் விதுஷன் (வயது 32) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிந்தவர் ஆவார்.

சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை அச்சு வேலி காவல்துறையினர் மேற் கொண்டு வருகின்றனர்.