
பிரான்சின் முல்கவுஸ் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும், தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னைநாள் மூத்த போராளியுமான அன்ரன் ஜெயசோதி ( கமல்) (வயது 59) அவர்கள் நேற்று (19.01.2025) ஞாயிற்றுக்கிழமை திடீர் உடல்நலக்குறைவால் சாவடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், பிரான்சு முல்கவுஸ் நகரை வாழ்விடமாகவும் கொண்ட இவர் தமிழ்த்தேசியப் பணிகளில் மிகவும் பற்றுறுதி யுடன் செயற்பட்டுவந்தவர்.
இவருடைய இழப்பு தமிழினத்திற்கு ஈடுசெய்யமுடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விவரம் குடும்பத்தினரால் பின்னர் அறியத்தரப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
