
இளையோர்களுக்கான சந்திப்பும் தமிழ் இளையோர் அமைப்பு நூவாசி லூ செக் தொடக்க நிகழ்வும் பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான நூவாசி லூ செக் நகரில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது,
இந் நிகழ்வில் எமது நூவாசி லூ செக் பகுதி வாழும் அதிகளவான இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்,
மேலும் இந்நிகழ்வில் மாநகர முதல்வர் மாணவர்களிடையே உரையாற்றியதோடு மட்டுமல்லாது இந்த முயற்சிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார், தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர், முன்னாள் பொறுப்பாளர் , தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் நிர்வாக செயற்பாட்டாளர் , தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் மற்றும் செயலாளர், தமிழ்ச்சோலை தலைமைப்பணியக செயற்பாட்டாளர் என அனைவரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மேலும் நூவாசி லூ செக் தமிழ்ச் சோலை மாணவர்களின் ஆக்கபூர்வமான எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
அழைப்பை ஏற்று வருகைதந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதோடு, தம்மை வாழ்த்தி பிள்ளைகளை அனுப்பிவைத்த பெற்றோர்களுக்கும் அழைத்து வந்து கூட்டம் முடியும் வரை காத்திருந்து பல வகையிலும் உதவி செய்த அனைத்து பெற்றோர்களுக்கும், சிற்றூண்டிகளை தயாரித்து வழங்கிய பெற்றோர்களுக்கும் இந்த நிகழ்வு சிறப்பாக நடந்து முடியும் வரை நின்று உதவி செய்த நிர்வாக உறுப்பினர்களுக்கும் தமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டதோடு
தம் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி எங்கள் இளம் தலைமுறைக்கு நல்ல முறையில் அனைவரும் இணைந்து வழிகாட்டுவோம் –
எம் தாய் தமிழ் மொழிக்கும் மக்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று
நூவாசி லூ செக் தமிழ்ச்சங்க நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


