ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள இந்திய துணை தூதரகங்களின் அருகே இன்று அடுத்தடுத்து குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடந்துள்ளன. பாகிஸ்தான் தூதரகமும் அருகேயுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
ஆப்கனின், ஜலாலாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சுமார் 200 மீட்டர் அருகே இன்று காலை வெடிகுண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.இச்சம்பவம் நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே தூதரகத்தை சுற்றி துப்பாக்கிச் சூடு தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
கடந்த 10 நாட்களில் இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்படும் 3-ஆவது தாக்குதல் இதுவாகும். தூதரகத்தில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.
தலிபான்களுடன் பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையிலும், இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை துவங்க இருந்த நிலையிலும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது
ஏற்கனவே இந்திய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் தான் காரணம் என ஆப்கான் போலீசார் அறிக்கை அளித்துள்ள நிலையில், இன்று மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்துவருவது பாகிஸ்தான் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.