மன்னார் நீதிமன்றம் முன்பாக சினிமா பாணியில் துப்பாக்கிச் சூடு; இருவர் உயிரிழப்பு!

0
98

மன்னார் நீதிமன்றம் முன்பாக பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் (16) வருகை தந்தவர்கள் மீது உந்துருளியில் வந்த இருவர் நீதிமன்ற முன்றலில் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அசாத் ஹனீபா தெரிவித்துள்ளனர்.

படுகொலை வழக்கு விசாரணை

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தைத் தொடர்ந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவரை மற்றைய தரப்பினர் படுகொலை செய்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக வருகை தந்தவர்கள் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தால் நீதிமன்ற சூழலில் பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .

காயமடைந்த நான்கு பேரில் இருவர் உயிரிழப்பு!
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here