சுவிஸில் எடுக்கப்பட்டுள்ள அவசரகால நடைமுறை!

0
631

சுவிசின் கூட்டாட்சித் தலைவர்கள் கூடி நாட்டின் அவசரகால முக்கிய முடிவுகள் பற்றி நேரலையில் பகிர்ந்துள்ளார்கள்.

வரும் ஏப்ரல் 4 வரை பாடசாலைகள் மூடப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து இரு வார விடுமுறை ஏப்ரல் 20 நாட்டின் அன்றைய நிலையை பார்த்து பாடசாலை மீள ஆரம்பமாகும்.

பிள்ளைகளை பேரன், பேர்த்தியிடமோ வயதானவர்களிடமோ பராமரிக்க விட்டுச் செல்வதை தவிர்க்கவும்.

எல்லைகள் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படுகின்றது. ஜேர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வேலைக்கு வருவோர் மாத்திரம் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதியோடு மட்டுமே உள் நுழையவும்.

இத்தாலியிலிருந்து சுவிஸ் குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே உள்வரலாம்.

சுற்றுலா செல்லவோ சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வரவோ தடை விதிக்கப்படுகின்றது.

நூறுபேருக்கு மேல் பொது இடங்களிலோ நிகழ்வுகளிலோ கூடுவதை தவிர்க்குமாறும், பணியாளர்கள் உட்பட ஐம்பது பேருக்கு மேல் உணவகங்களில் கூடுவதைத் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முடிந்தவரை பொதுப்போக்குவரத்தை தவிர்த்துக் கொள்ளவும்.

இவை கடினமான நடவடிக்கைகள்தான். நாம் எமது இலக்கை அடைவதற்கு இவை அவசியமாகின்றது.
முழுமையான ஒத்துழைப்பு வழங்கி நோய்ப்பரம்பலைத் தடுக்க ஒத்துழைப்பு வளங்குமாறு மக்களை வேண்டி நிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை, மருத்துவம் சார்ந்த அனைத்துத்துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு மனம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகின்றது.