அடர்ந்த காட்டுப் பாதைகளைக் கடந்து பத்தாவது நாளில் பயணிக்கும் நடைபயணம்!

0
417

நீதிக்கான நடைபயணம் இன்று 10 ஆவது நாளாக நேற்றைய தினம் நிறைவு பெற்ற இடத்திலிருந்து ( Balnot la Grange )இன்று காலை அகவணக்கத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

நேற்று ஒன்பதாவது நாள் . செல்லும் பாதை அடர்ந்த காட்டுப்பாதையும் வளி எங்கும் பன்றி, மான், முயல் போன்ற விலங்குகள் இருப்பதையும் சில வாகனங்களில் சிக்குண்டு இறந்து கிடந்தமையும் ஒரு புது அனுபவமாகும். எமக்கான விடுதலையும், நீதியையும் இந்த உலகம் ஒருநாள் தந்தே ஆகவேண்டும். அதற்காகவே தான் இந்த அடர்ந்த காடுகளிலும்,மேடுகளிலும் இந்த நடைபயணம் செல்கின்றது. சென்ற தடவை ஈருருளிப்பயணமும் இந்த மாநிலத்தையும் கண்டே சென்றிருந்தது. அதனை பிரான்சு நாட்டின் பிரதானமான அதிக அதிகாரமிக்க காவல்துறையான Gendarmerie இன் பிரதேசப் பொறுப்பாளர் நடைபயணத்தை மேற்கொண்டவர்களோடு வழியில் நேற்று உரையாடும் போது கூறியிருந்தார்.
இது எமது சனநாயகரீதியிலான போராட்டம் எல்லோரிடமும் பிரெஞ்சு மக்களிடமும் அதிகாரமிக்கவர்களிடமும் சென்றடைந்திருக்கின்றது என்பதை உணர்த்தி நிற்கின்றது.

நேற்றுக் காலை ஆரம்பித்த நீதிக்கான நடைபயணப்போராட்டம் மொத்தமாக 222 கிலோ மீற்றர் தாண்டி முதலாம்,இரண்டாம் யுத்தத்தில் தமது நாட்டிற்காக உயிர் ஈந்தவர்களின் நினைவான Balnot la Grange என்னும் நகரத்தில் மாலை நிறைவு பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here