சம்பந்தனே பேரவையை வரவேற்றபோது இனி நாம் பாகுபாடு காட்டக் கூடாது என சிவாஜிலிங்கம் எடுத்துரைப்பு!

0
795
sivaji 56dwதமிழ் மக்கள் பேரவை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே வர வேற்கும்போது, நாங்கள் அவர் களை இணைத்து கொள்ளலாம் அல்லது இவர்களை வெளியேற்றலாம் என பாகுபாடு காட்டக் கூடாது என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் பேரவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன் போது, இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில், இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்துக்கு மத்திய அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கான வடமாகாண சபை உறுப்பினர்களைக் கொண்டமைந்த விசேட குழுவொன்று நேற்றைய தினம் அன்கூரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

முதலமைச்சர் உட்பட அரைவாசி உறுப்பினர்களது பேர்கள் குறிப்பிடப்பட்டு இருந்த போதிலும் ஆளுங்கட்சி உறுப்பினரம் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியை சேர்ந்தவருமான கந்தையா சர்வேஸ்வரன் பெயர் முன்னர் குறிப்பிடப்படவில்லை. சர்வேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையின் செயற%8