தமிழர்களின் நிலப்பரப்பான முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பிரதேசத்தில் பாரிய பௌத்த விகாரையொன்று உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஈழப்போர் முடிவுற்றதன் பின்னர் இந்த பகுதியில் புதிதாக குடியேற்றப்பட்ட மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிங்களவர்களின் பயன்பாட்டுக்காக என்ற போர்வையில் இந்த பாரிய விகாரை கட்டியெழுப்பப்படுவதாக கூறப்படுகிறது.
சிறீ திஸ்ஸபுர குணரத்ன ஹிமி என்ற தேரர் இந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இந்த விகாரையின் நிர்மாணப் பணிகளுக்கு நிதியுதவி சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.