அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக விமான மற்றும் ரயில் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது.
டென்னஸ்ஸி, வடக்கு கரோலினா, விர்ஜினியா, மேரிலேண்ட், பென்சில்வானியா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 அடி உயரத்துக்கு பனி உறைந்து காணப்படுகிறது.
இதனால் இலட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் உள்ளனர்.
பனிப்பொழிவால் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையுள்ளது. இதனால் பால், ரொட்டி, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதுக%A